July 30, 2010

டைபிஸ்ட் தங்கமணி





முஸ்கி :  இங்க குடுத்திருக்குற வீடியோ கிளிப்ஸ, இதுக்கு முன்னாடி யாரவது பாத்திருந்தா, பொறுத்துக் கொள்ளவும். தலைப்புல வச்சிருக்குற , இந்த ”தங்கமணி “ ன்ற பேரை யாராவது காப்பிரைட் பன்ணி வச்சிருந்தா சொல்லிருஙக மாத்திரலாம்..., சண்டை போட வேணாம், எனக்கு பயந்த சுபாவம்


வலையுலகதுல, வர வர சங்கங்கள் நெறய ஆயிடிசுச்சி, அவங்க கொள்கைகள டைப் அடிக்க ஆளில்லாம கஷ்ப்படுராங்களாம்,  அப்புறம் பல பேரு ஆனி அதிகமாகி டைப் அடிக்க வேற கஷ்டப்படுறதா நம்ம காதுக்கு நூசு வந்துச்சி,.
அவங்க கொறய போக்குறதுகாக ஏதாவது உதவி பண்ணலாம்னு , மல்லாக்க படுத்து, விட்டத்தை பார்த்துகிட்டே யோசிக்கும்போது,  ரொம்ப நாளா தெரிஞ்ச ஒரு டைப்பிஸ்டு அம்மணி ஞாபகம் வந்திச்சி,  அவங்கள ஏன் இவங்களுக்கு டைப் அடிக்க உதவியா அனுப்பகூடாதுனு ஒரே ரோசனை,  அதன் அவங்களோட டைப் அடிக்குற அழக இங்க வீடியோவா குடுத்திருக்கேன், பாருங்க சரின்னு தோனிச்சுன்னா அப்பாய்ண்ட் பன்னிக்குங்க ( 194KB file).


டைபிங் மிஷின்ல டைப் அடிச்சிட்டு இருந்தவங்க, ஒன்னும் பயப்படாதீங்க, ஒரு 100 மானிட்டர் எக்ஸ்ட்ராவா வாங்க வேண்டியிருக்கும் அவ்வளவுதான், மத்தபடி ரொம்ப நல்லா டைப் அடிப்பாங்க.

இதுகெல்லாம் கன்சல்டன்ஸி பீஸ் எதுவும் வேணாம், ஓசிதான்...

=======================================================================

அடுத்து கீழே இடுக்குர வீடியோ கிளிப் பாருங்க, இந்த அண்ணாத்தே திரும்பவும் இதேமாதிரி பண்ணாம இருக்குறதுக்கு எதேனும் நல்ல ஐடியா இருந்தா சொல்லிட்டு போங்க, பாவம் புண்ணியமா போகும்(528 KB file).



=======================================================================

உடம்பு குண்டாயிருச்சினு கொல்லப்பேரு டயட்டு, ஜிம்முனு போய் கஷ்டப்படுராங்க, அதெல்லாம் பன்னாதீங்க, கீழே வீடியோவ பாருங்க, குண்டாயிருக்குறது எவ்வளவு நல்லதுன்னு உங்களுக்கே புரியும்...(686 KB file)




=======================================================================

டிஸ்கி : அதிக ஆனியால, உருப்படியா ஒன்னும் எழுத முடியல, கிடைகுற நேரத்துல அடுத்தவங்க பதிவ படிக்குறதுக்கும், பின்னூட்டம் போடுறதுக்குமே சரியா இருக்கு, அதனால இந்த வீடியோ சமளிப்புகேசிங்.......

வழக்கம்போல தலையெழுத்தேனு உங்க பின்னூட்டத்தையும் , ஒட்டையும் இங்க போட்டுட்டு போங்க...

July 26, 2010

புளியமரத்தடியில் 1 மணி நேரம் படுத்து எழுந்தால் ரூ 80/- உறுதி.......









இன்று காலையில் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன்...

செய்தித் தலைப்பு :வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் சம்பள உயர்வா?.

திட்டத்தின் பெயர் : மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (எம்.என்.ஆர்..ஜி.).

திட்டத்தின் நோக்கம் :  “ கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது “.

        இத்திட்டத்தின் கீழ் , ஒவ்வொரு நிதியாண்டிலும் , கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 100 நாட்கல் வேலை அளிக்கப்படும்.. ஆறுகள், குளங்கள்,கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.. 

      இந்த திட்டம் 2005-ல் கொண்டுவரப்பட்டு , 2006-ல், 200 மாவட்டங்களில் 11-ஆயிரம் நிதி ஒதிகீட்டில் ஆரம்பித்து 2010-11-ல் 40-ஆயிரத்து 100 கோடி ரூபாயாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ( நன்றி தினமலர்).

      சரி விசயத்திற்கு வருவோம் :

      திட்டத்தின் நோக்கம் சரியாகத்தான் படுகிறது, ஆனால் அது செயல் படுத்தும் விதம் எப்படி உள்ளது?...

      நேற்று எங்கள் கிராமத்திலிருந்த உறவினர், சென்னையில் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு வந்தவர், வீட்டுக்கு வந்திருந்தார், அவரிடம் வழக்ம்போல், என்ன மாமா, ஆடி பொறந்திருச்சி, நிலமெல்லாம் உழ ஆரம்பிச்சாச்சா?, ஆவணில வெதை வெதைக்க ஆரம்பிக்கனுமில்லனு கேட்டேன், அதுக்கு அடப்போ மாப்ள என்னத்த வெதைச்சி என்னத்தே (சினிமால ஒருத்தர் சொல்வாரே அதே மாதிரி ஸ்டைலில்) விவசாயம் பண்ண, பேசாம, இந்த வருசம் பூரா நிலத்தையும் தருசா போட்ரலாம்னு இருக்கேன் என்று வெறுப்புடன் சொன்னார்

      அவரின் மொத்த புலம்பலையும் எழுதினால் பத்து நாளைக்கு டைப் அடிக்கனும், எனவே இன்று காலை வந்த மேற்கண்ட செய்தியை படித்திவிட்டு அதனால் எவ்வாறு விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று அவர் சொன்ன தகவல்களில் ஒரு சிலது மட்டுமே இந்த பதிவில்:


  •        இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் வறுமைகோட்டிற்கு கீழேயோ அல்லது வேலையில்லதவர்களோ இல்லை.( காரணம் யார் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற தெளிவா வரையறை அரசினால் சரியாக பிரிக்கப்படாமல் ஓட்டு வாங்கும் எண்ணத்தில் அனைவருக்கும் என்றாகிவிட்டது).
  •      எங்கள் ஊரில் ஒரு அரைமணி நேரம், ரோட்டோர ஓடையில் தூர்வாருகிறேன் என்கிற பேரில் மம்பட்டியால் நாலு இலு இலுத்துவிட்டு, புளிய மரத்தடியில் ஒரு மணி நேரம் தூங்கிவிட்டு வந்தால் 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் குடுத்து விடுகிறார்கள். நோகாமல் நுங்கு கிடைப்பதால் , விவசாய வேலைகளுக்கு யாரும் வருவதில்லை
  •      அப்படியே,  யாரும் விவசாய வேலைகளுக்கு வந்தாலும், சும்மா மரத்தடியில் தூங்குவதற்கே 80 ரூபாய் கிடைக்கிறது , விவசாயக் கூலியோடு அந்த 80 ரூபாயும் சேர்த்துக் கொடுத்தால்தான் வருவோம் என்கிறார்கள். ( 80 ரூபாயாக இருந்த தினக் கூலி இந்த திட்டம் வந்த பிறகு 200 -க்கும் மேல்).

  •      ஏற்கனவே குடுக்கும் கூலிக்கே விவசாயம் கட்டுபடியாகவில்லை, இதில் எங்கே கூட்டிக்குடுப்பது....?.( நான் சொல்லும் விவசாயிகள் ஐந்து விரல்களில் மோதிரம் அணிந்து கொண்டிருக்கும் பண்ணையார்கள் அல்ல, மாறாக மண்ணோடு போராடுவதைத்தவிர வேரெதுவும் தெரியாத, வேரெந்த போக்கும் தெரியாத அப்பாவிகள்)


  •      நிலம் வைத்து விவசாயம் செய்துகொண்டிருந்த பலபேர், பயிரிடுவதை விட்டு அவர்களும் புளியமரத்தடியில் தூங்கிவிட்டு 80 ரூபாய் வாங்கி பொளப்பு நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.(எங்க ஊர்ல இருக்குர எல்லாரும் இந்த வறுமை ..!!! கோட்டுக்கு கீழே இருக்குரதாத்தான் இந்த திட்டத்துல சேர்ந்திருக்காங்க..!!!).


  •      சரி கோடையில் விவசாயம் பயிரிடுவது அருந்தலாக இருக்கும் சமயத்தில் மட்டுமாவது இத்திட்டத்தை அமல்படுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ( கேட்டால், ஏதோ இதுவரையும், இப்போதும் எந்த விவசாயியும் நிலத்தில் கால்வத்ததே இல்லை, என்பது மாதிரி... அவரவர் நிலத்தில் அவரவர்கள் இறங்கி வேலை செய்யட்டும் என்று நக்கல் வேறு, இப்படி சொல்பவர்கள் அவர்கள் வீட்டு நாய் கக்கா போனாலும் அதை கழுவிவிட , நாலு வேலையாட்களை வைத்திருக்கிறார்கள்)


  •      பருத்தி, மிளகாய், அனைத்து காய்கறிகள், கடலை, கரும்பு என்று பயிரிட்டுவந்தது நின்று போய் கடந்த சில வருடங்களாக மக்காச்சோளம் மட்டுமே பயிரிட்டு வந்தார்கள் ( நாலுதடைவை களையெடுப்பு, மூன்றுதடவை மருந்தடித்து , மழை நாட்கள் போக மீதி நாட்களில் தண்ணீர் பாய்ச்சுவது... என்று வேலையாட்களின் தேவை குறைவு...).


  •     அரசின் இந்த திட்டத்தின் புண்ணியத்தில் இப்போது வேலையாட்கள் சுத்தமாக வருவதில்லை, ஆக பயிரிடும் எண்ணத்தையே கைவிடும் நிலை விவசாயிக்கு. அவர்களும் புளியமரத்தடியில் படுத்து விட்டு 80 ரூபாய் வாங்கி குடித்தனம் நடத்த தயாராகிவிட்டார்கள்...


  •      சரி சும்மா இருக்கும் நிலத்தை என்ன செய்வது?, அதை இப்போது ரியல் எஸ்டேட்டுக்கும், கேரளாவிலிருந்து வரும் பங்காளிகளுக்கு விற்றுக் காசாக்கி கொண்டிருக்கிறார்கள் ( அவர்கள் ஏதோ காத்தாடி வைத்து கரண்ட் எடுக்கப் போகிறார்களாம்)


  •      வாங்கிய நிலத்தில் 300 மீட்டருக்கு ஒரு காத்தாடி என்று நிறுவுகிறார்கள். இதற்கு இடைப்பட்ட நிலத்தில் பயிர்களின் மகசூல், குறைந்து விடுகிறது.. மேலும் காற்றில் உள்ள ஈரப்பததையும் நிலத்தின் ஈரப்பததையும் இது முற்றிலும் காலியாக்கிவிடுகிறது .


  •     ஒருபுறம் அரசின் நடவடிக்கைகள் விவசாயத்தை நசுக்கினால், மறுபுறம் ரியல் எஸ்டேட் மற்றும் இண்டஸ்ட்ரியல் என்ற பேரில் விவசாய நிலங்களையே காலியாக்கும் செயல்பாடுகள் நடக்கிறது.

           பத்தாண்டுகளுக்கு முன் இருந்த விவசாய உற்பத்தி வளர்ச்சி படிப்படியாக குறைந்து இப்போது கிட்டதட்ட 2% வளர்ச்சியில் வந்து நின்று மணியடித்த பிறகும் உறிதியான நடவடிக்கை இல்லை, கேட்டால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 8 % , 9% என்று மார்தட்டுகிறார்கள்.

      ஊருக்கு சென்றால் பச்சை பாசேல் என்று பார்த்து பரவசப்பட்டது கடந்தகாலமாகி, இப்போது சென்று பார்த்தால் எல்லாம் பொட்டல் காடுளாக பார்க்க சகிக்கவில்லை.

      நாளை என் பிள்ளைகள் வளர்ந்தால் ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் விவசாயத்தை பற்றி நேரடியாவாவது காட்டலாம் என்றிருந்தேன், அது முடியாமல், டிஸ்கவரி சானலில்தான் காட்டவேண்டும் போல் இருக்கிறது .

நம் நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு உணவுப்பொருட்கள்
  • இறக்குமதியென்பது சாத்தியப்படுமா?...,
  • நம்மால் அதற்கு செலவிடமுடியுமா?...,
  • அரசும் மக்களும் எப்போது இதைபற்றி கவலைப்படபோகிறார்கள்....?
  • இந்த புளியமரத்தடியில் தூங்கி விட்டு கூலிவாங்கும் கலாச்சாரம் மாறுமா?...
  • விவசாயம் அழிவதனால் உருவாகும் பிரச்சினை, அசாதாரனமான ஒன்று இல்லையா?.


      ஒருவேளை, நாளய தலைமுறை, இப்போதிருக்கும் உணவுப்பொருட்களுக்கு மற்றாக வேறு ஏதேனும் கண்டுபிடித்து திங்கப்போகிறார்கள் என்று அரசும் , நாமும் நினைக்கிரோமா...

ஒன்றும் புரியவில்லை..

      திட்டத்தின் நோக்கத்தை பற்றி சொல்லுபோது நல்லாத்தன் இருந்தது இப்போது அது செயல்படுத்தும் விதம், எதிமறையான விளைவுகளையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது....

      ஏற்கனவே, வாங்கும் விதையிலிருந்து, உரம், மருந்து என்று விவசாயி வாங்கும் பொருட்களின் விலை அதிகமாகிவிட்டது. இயற்கையை அழிக்க நாம் காட்டும் முனைப்பின் காரணமாக, கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழையின் அளவு குறைந்து, அதனால் நிலத்தடி நீரின் அளவு குறைந்து, விதைத்த பயிரை முழுசா அறுவடை செய்றதே பெரும்பாடா இருக்கு. சரி அறுவடை செய்ஞ்சதுக்கு விலையும் கட்டுபடியாகவில்லை. ( நாம் சென்னையில் கடையில் வாங்கும் விலைக்கும், விவசாயி அறுவடை செய்ததை சந்தையில் விற்கும் விலைக்கும் சம்பந்தமே இல்லை...).


டிஸ்கி 1 : சொல்ல வந்த கருத்தை கோர்வையாக சொல்லியிருகிறேனா என்று தெரியவில்லை. இங்கு நான் சொன்ன கருத்தில் மாற்று உள்ளவர்கள் காரணத்தை சொல்லிவிட்டு கும்மலாம். (  ங்கொய்யாலே கும்முரதுக்கெல்லாம் காரணம் தேவையில்லை என்று சொல்வது காதில் விழுகிறது..)

டிஸ்கி 2 : பிழையில்லாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்,  பிழைகளை பெருந்தன்மையோடு மன்னித்து விடவும்.


டிஸ்கி 3 : பதிவில் எங்கேனும் தடித்த வார்த்தைகள் இருப்பதாக யாரேனும் கருதினால் சொல்லவும் நீக்கிவிடலாம்.


பதிவு பிடித்திருந்தால் உங்களின் கருத்தையும் , ஓட்டையும்  அளிக்கவும்.  

July 20, 2010

ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

`10 -ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

முஸ்கி  : நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்லஎனது அனுவத்தில் நான் மேற்கொண்டபலனைத்தந்தவீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.


          இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்துவிடும். நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

        எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

        சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

        வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார். வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்(ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):


¼ கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது) ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை( ஒரே முரையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

       நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

     கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளிவருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர் பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கல் ஒரு ஸேப் இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலு சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ள்லாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

    சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம் , அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன்னெச்சிரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதி உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதயைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.






டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

டிஸ்கி 3 : இந்த ஆலோசனை இலவசம் தான், யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன், அதற்குபதில் உங்க கருத்துக்களையும், ஒட்டும் இட்டுச்செல்லவும்.


LinkWithin

Related Posts with Thumbnails