August 27, 2013

கிராமத்து விளையாட்டுகள்


*கிராமத்து விளையாட்டுகள்*

  தாம்பரம் இறங்குறவங்க எல்லாம் இறங்குங்க, சத்தம் கேட்டு விழித்து சுதாரிப்பானார் ராமசாமி. நீண்ட தூரம் பேருந்து பயணம் செய்வது தன் வாழ் நாளில் இது பத்து தடவைக்குள் இருக்கலாம். சன்னல் கண்ணாடியை ஒரு புறம் ஒதுக்கி தள்ளிவிட்டு வெளியே பார்த்தார், நன்றாக விடிந்துவிட்டிருந்தது, சூரியன் மேக மூட்டத்துக்குள் செங்கல்மங்கலாக தெரிந்தான்.

  கோவிந்தசாமி தன் பேத்திக்கு திருமணம் நிச்சயத்திருப்பதாகவும், திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றும் கடந்த மாதம் ஊர் வந்து அழைப்பிதல் குடுத்திருந்தான். பால்ய கால சினேகிதன், ஒன்றாக பத்தாவதுவரை கிராமத்து பள்ளியில் படித்தவன். ஓனான் பிடிப்பது, கம்மாக் கரையில் நண்டு பிடித்து சுட்டு சாப்பிடுவது, பம்பரம், கில்லி, கிளியிறக்கம், கபடி, சைக்கிள் டயர்/ரிம் உருட்டுவது, ஆடுபுலி ஆட்டம், தாயகட்டு, எறிபந்து, குழிபந்து, கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிப்பது,  என்று வருடம் முழுவதும் ஏதாவது ஒரு விளயாட்டு என்று கூடவே சுற்றி திருந்த காலம் அது.

  கோவிந்தசாமி கல்வி, வேலை என்று கிராமத்தை விட்டு கிளம்பிவிட ராமசாமி பத்தாவதில் பெயில் ஆனவுடன் விவசாயம், ஆடு மாடுகள் என்று கிராமத்தோடு ஒன்றிவிட்டிருந்தார். கோவிந்தசாமி மாதம் ஒருமுறை என்று ஊர் வந்தவர், அடுத்து ஆறுமாதம், ஒருவருடம் என்ற இடைவெளியாகி... இறுதியாக பத்தாண்டுகளுக்கு முன் நாட்டாமை வீட்டு விசேசத்திற்கு வந்தவர், போனமாதம்தான் பேத்தியின் திருமண அழைப்பிதல் குடுக்க ஊர் வந்திருந்தார்.

  ராமசாமியும் ஊர் முழுவதும் அழைப்பிதல் குடுக்க கூடவே சுற்றினார். பால்ய கால நினைவுகள் துரத்த கம்மாக்கரை மேட்டில் உட்கார்ந்து மணிக்கணக்காக பேசினார்கள். கடந்த சில வருடங்களாகவே சக வயது நண்பர்கள் பலரின் மறைவுகளால் தனிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறோமோ என்று, மனதை கொஞ்சம் உலுக்கவே செய்திருந்தது.

  ”பெரியவரே வரேங்க பார்க்கலாம், இதில் முகவரி இருக்கு, நேரமிருந்தா வீட்டுக்கு வந்துட்டு போங்க, பக்கத்து சீட்டு இளைஞனின் வேண்டுகோளால் சுய நினைவிற்கு வந்தார் ராமசாமி. பக்கத்து ஊர் மாரிச்சாமியின் மகனாம். சின்ன வயதில் பார்த்தது, மாரிச்சாமியின் மறைவிற்கு பின் அவர் வீட்டின் பரிச்சயம் நின்றுபோனது. தேனியில் பஸ் ஏறும் போதே என்னை அடையாளம் கண்டு கொண்டு நலம் விசாரித்தவன். இப்போது சென்னையில் பெரிய வேலையில் இருப்பதாக சொன்னான். படிப்பு வராமல் வேறு வேலை தெரியாதவர்கள் மட்டுமே ஊர் தங்கி விவசாயம் பார்ப்பது என்றாகிவிட்டது. அதிலும் பலர், சித்தாள், கொத்தனார் என்று வெளியூர் , சவூதிஅரேபியா என்று சென்று விடுகிறார்கள்.

  போனதலைமுறை போல அல்லாமல் கிராமத்திலும் இப்போது படித்தால் சம்பாதித்து சுகமாக இருக்கலாம் போன்ற புரிதல்கள் ஆரம்பித்து, இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடின்றி எல்லாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போக்கு அதிகரித்துவிட்டது. பள்ளி படிப்பிற்காக கடன் வாங்குவது கூட சகஜமாகிவிட்டது, அதனால் தானோ என்னவோ, பள்ளி முடிந்து வீடு வரும் குழந்தைகளை விளையாட விடாமல், படிப்பு படிப்பு என்று வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், மீதி நேரம் டிவி பார்ப்பதில் கழிந்து, ஓடியாடி விளையாடுவது என்பது பட்டணம் போல் கிராமத்திலும் மிகவும் குறைந்துவிட்டது.

  ஊருக்கு வந்த கந்தசாமி, கிராமத்தில் விடலைகள் விளையாடுவது குரைந்திருப்பது கண்டு, ம்ம்ம், இங்கே விளையாடுறது குறைஞ்சிருக்கு, பட்டணத்தில இப்பதான் விளையாடுறது அதிகமாயிருக்கு, நாம விளையாண்ட அத்தனை விளையாட்டுகளும் இப்போது பட்டணத்தில் ரொம்ப பிரபலம் ஆகிவிட்டது தெரியுமா?, என் பையனுக்கு எல்லா விளையாட்டுகள், அதன் வரையறைகள்னு சொல்லி குடுத்து, இப்ப அவன் சூப்பரா விளையாடுறான் தெரியுமா? என்று சொல்லியிருந்தான். அப்பாடா பட்டணத்து குழந்தைகளாவது விளையாடி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறார்களே என்று ராமசாமி மனதில் எண்ணிகொண்டார்.

  பேருந்தின் சன்னல் வழியே பார்வையை ஓட்டினார். இன்று ஞாயிற்றுக் கிழமை, பள்ளிகளுக்கு விடுமுறை தினம். கோயம்பேடு போய் சேருவதற்குள் கிராமத்து விளையாட்டுகளை எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்த்துவிட ஆர்வம் அதிகமாகி, பார்வையை சன்னல் வழியே செலுத்தினார். பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஆங்காங்கே விளையாட்டு திடல்கள் ஒன்று இரண்டு தட்டுபட்டாலும், அதில் மிக சொற்பமான அளவில் சிலர் கிரிக்கெட் மட்டுமே விளையாடுவது தெரிந்தது. கில்லி, பம்பரம், கபடி, எறிபந்து என்று யாரும் விளையாடியதாக தெரியவில்லை.

  கந்தசாமி சொன்னானே, அவன் பொய் சொல்லுபவன் கிடையாதே?, ராமசாமியின் மனதில் பல்வேறு கேள்விகள். கோயம்பேடு பேருந்து நிலையம் இறங்கும் போது அழைத்துச் செல்ல கந்தசாமி காத்திருந்தார்.

  வீடு வந்து குளித்து முடித்து காலை உணவு முடிந்தது. அதற்கு மேல் ராமசாமியால் பொறுமை காக்க முடியாமல் கேட்டே விட்டார். “எலேய் கந்தா, ஏதோ பட்டணத்தில் பசங்க எல்லாம் விளையாடுறது அதிகமாகிடுச்சி, நம்மூர்ல நாம விளையாண்ட விளையாட்டெல்லாம் ரொம்ப ஆர்வமா விளையாட ஆரம்பிச்சிட்டாங்கனு சொன்னியே, பேருந்துல வந்த போது பார்த்தேன், கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் விளையாடி பார்க்கலையே?, என்று கேட்டுவிட்டார்.

  அட ராமசாமி உண்மைதான், வா காமிக்கிறேன் என்று வீட்டின் மூலையில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார், அறையில் கண்ட காட்சியை பார்த்து திகைத்துப் போய் நின்றார் ராமசாமி.

  ஆமாம் அந்த அறையில் கந்தசாமியின் 15 வயது பேரன், கம்யூட்டரில் கபடி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான். கந்தசாமி மேலும் சொன்னார், இங்கே மட்டும் இல்லை ராமசாமி, கிட்டதட்ட பட்டணத்தில இருக்கிற எல்லார் வீட்லயும் பசங்க நம்மூர் விளையாட்டுகளைத் தான் விளையாடுறாங்க...!



பி.கு : சின்னதா கதை ஒன்னு எழுதலாம் என்ற எண்ணத்தில், என் முதல் முயற்சி...


August 01, 2013

மாபெரும் பதிவர் திருவிழா 2013- முக்கிய அறிவிப்பு

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை
இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி
ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
நூல் வெளியீடு:

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்
வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.
(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)



வருகைப் பதிவு:

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே  வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.
கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
  -          ஆரூர் மூனா செந்தில்  
·         அஞ்சாசிங்கம் செல்வின்
·         சிவக்குமார் மெட்ராஸ்பவன்
·         பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
·         தமிழ்வாசி பிரகாஷ் மதுரை
·         சதீஷ் சங்கவி கோவை
·         வீடு சுரேஷ்குமார் திருப்பூர்
·         கோகுல் மகாலிங்கம் பாண்டிச்சேரி
·         தனபாலன் - திண்டுக்கல்

நன்கொடை:



இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள்  மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து  தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

இதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.  எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக பகிரப்படும்:

                                                                 



ஜோதிஜி திருப்பூர்
கவிதைவீதி செளந்தர்
சரவணன்(ஸ்கூல் பையன்)
ரூபக்ராம்
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
காணாமல் போன கனவுகள் ராஜீ
கேபிள் சங்கர்
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
தனபாலன் - திண்டுக்கல்
வீடு சுரேஷ்
சசிமோகன்
இரவுவானம் சுரேஷ்
நாய் நக்ஸ் நக்கீரன்
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
நிகழ்காலம் எழில்
கலாகுமரன்
கோவை ஆவி
உலகசினிமா பாஸ்கரன்
சுட்டிமலர்
கோவை கமல்
கோவை சதிஸ்
வெண்பா சுஜாதா
கோவை நேரம் ஜீவா
கோவை சக்தி
இப்படிக்கு இளங்கோ
ஒட்டக்கூத்தன்
வா.மு.முரளி
ஒட்டக்கூத்தன்
கோவை கோவி
சாமக்கோடங்கி பிரகாஷ்
கோவை ராமநாதன்
சதீஸ் சங்கவி
சிபி செந்தில்குமார்
வீரகுமார்
குருவை மாதேஸ்
குணா
சேலம் தேவா
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கிராமத்துக் காக்கை
விஜயன் துரைராஜ் கடற்கரை
கருத்து கந்தசாமி
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
முகமது சபி சக்கரக்கட்டி
அ.சிவசங்கர்
தங்கம் பழனி
முனைவர் இரா.குணசீலன்
சைதை அஜீஸ்
குடந்தையூர் ஆர். வி. சரவணன்
முரளிக்கண்ணன் மதுரை
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
சசிகலா திருவண்ணாமலை
ஜீவன் சுப்பு,
சிவகாசிகாரன் ராம் குமார்,
சதீஸ் செல்லதுரை
கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
சுப்புரத்தினம்
ராகவாச்சாரி
ரேகா ராகவன்
ஆதிமனிதன்
சமீரா 
நம்பி
வழிப்போக்கன் ராஜேஷ்
பழனி கந்தசாமி(மன அலைகள்)
புலவர் இராமானுஜம்
சென்னை பித்தன்
கவிஞர் மதுமதி
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
மோகன்குமார்(வீடு திரும்பல்)
கவியாழி கண்ணதாசன்
பட்டிகாட்டான் ஜெய்
டி.என்.முரளிதரன்
கே.ஆர்.பி.செந்தில்
ஆரூர் மூனா செந்தில்
அஞ்சாசிங்கம் செல்வின்
அரசன் ( கரைசேரா அலை)
சீனு (திடங்கொண்டுபோராடு)
பிலாசபி பிரபாகரன்
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
 
 
மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து  தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)

July 18, 2013

பதிவர் திருவிழா தேதி அறிவிப்பு

பதிவுலக நட்புகளே,

கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும் கனிசமான எண்ணிக்கையில்) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பு திருவிழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவர் திருவிழாவிற்கான பணிகள் மெற்கொள்வதற்காக கடந்த ஆண்டை போலவே பல்வேறு பதிவர் குழுக்கள் அமைக்கபட்டு அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு திருவிழா பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விருப்பமுள்ள பதிவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.

விழாவினை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடத்த பதிவர்கள் தங்களது ஆலோசனைகளை ஞாயிற்றுக் கிழமை தோரும் கே,கே.நகரில் உள்ள DISCOVERY BOOK PALACE-ல் மாலை 4 மணிக்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களின் போது தெரியப்படுத்தலாம், விழக்குழுவினர் அனைவரது கருத்துக்களையும் திறந்த மனதோடு கேட்டு, ஒரு நாளில் நடக்கும் நிகழ்ழ்சி நிரலில் சாத்தியப்படும் அனைத்தையும் சேர்க்க முனைவார்கள். யாரேனும் விழாக்குழுவினருடன் இணைந்து பொறுப்புகளை ஏற்று நடத்த முன்வந்தால் அவர்களையும் இனைத்துக்கொண்டு பதிவர் சந்திப்பு விழாவினை நடத்த விழாக்குழுவினர் முன் வந்திருக்கிறார்கள்.

இந்த விழாவிற்காக கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெறும் பதிவர்களுக்கு விழாவின் போது பரிசுகள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு வாரத்தில் பதிவர்களின் பதிவுகள் மூலம் வெளியிடப்படும்.

இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம் மாநாட்டுக்காக புக் செய்யபட்டுள்ளது.
மாநாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகப்புத்தோற்றம். (படத்தில் இருக்கும் அழகான வாலிப பையன் அடியேன் தான்)

கட்டிடத்தின் முன் பகுதியில் போதுமான இடவசதி உள்ளது.

வாயில்பகுதியிலிருந்து எடுத்த படம்.

வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளது.


முதலில் கடந்த வருடத்தைப் போல் ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான ஆகஸ்ட் 25 ல் நடத்தலாமா என்று ஆலோசித்து அன்று பல பதிவர்கள் TNPSC தேர்வு எழுத இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அந்த தேதி நிராகரிக்கபட்டது. செப். மாத ஞாயிற்றுக்கிழமைகளில், செப்.8 முகூர்த்த தினமென்பதால் பல பதிவர்கள் அந்த தேதிக்கு ஆட்சேபம் தெரிவிக்க அந்த தேதியும் வேண்டாம் என்று, முடிவில் செப். 1 ல் நடத்தலாம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது.

பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

  1. மதுமதி kavimadhumathi@gmail.com
  2. பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com
  3. சிவக்குமார் – madrasminnal@gmail.com
  4. ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
  5. அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
  6. பாலகணேஷ் bganesh55@gmail.com
  7. சசிகலா - sasikala2010eni@gmail.com

உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.

 பின்குறிப்பு : வலையுலக நட்புகள் இந்த தகவலை தங்கள் வலைதளத்தில் பதிவிடுமரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

July 04, 2013

எப்போது தீரும் இந்த சாதிப் பிரச்சனை?

காதலை ஊக்குவிப்பதற்கு முன் காதலை ஏற்பதற்கு ஏற்ற மனநிலையை, ஒரு சமூகச் சூழலை, இந்த சாதிய கட்டமைப்புகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் இந்த சமூகத்திற்கு சொல்லித்தர வேண்டியது அல்லது அதனை தயார் செய்வதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும் போல தெரிகிறது.

சாதி ஒழிப்பென்பது பார்ப்பனீயத்தை ஒழித்தால் மட்டுமே சரியாகிவிடும் என்பது போன்ற ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமே தமிழகத்தின் திராவிட இயக்கங்கள்்்துதான் முதல் வேலையாக இருக்க வேண்டும் போல. செய்த சாதனையாக தெரிகிறது.
 
இத்துனை வருடங்களாக, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த பட்ட, தாழ்த்தபட்ட என்ற வரையறைக்குள் சாதிகளை அடக்கி வெளிப்பேச்சில் மேடைகளில் சாதிக்கி எதிராக பேசிக்கொண்டும், செயல் பாடுகளில் சாதிகளின் வீரியம் குறைந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டும், எந்த சாதி மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த சாதி பார்த்து தேர்தல் சீட்டு வழங்கியும், அல்லது பெரும்பான்மை எண்ணிக்கை மக்கள் இருக்கும் சாதிச் சங்க தலைவர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களுடன் அரசியல் உடன்பாடுகள் செய்துகொண்டும், உண்மையில் சாதியை அரசியல் அதிகாரம் என்ற போதைக்காக வளர்த்துக் கொண்டிருந்ததுதான் திராவிட அரசியலின் சாதனையாக தோன்றுகிறது.

பார்ப்பனீய எதிர்ப்பு என்ற ஒற்றைச் சொல்லால் மற்ற சமுதாய சாதி ஏற்றதாழ்வுகள் மறக்கடிக்கபட்டது என்பதே கண்கூடு.

சாதிய துவேஷத்தை வேண்டுமானால் நான்கு தற்குறிகளால் ஒரிரவில் பற்ற வைத்துவிடமுடியும், ஆனால் சாதிய ஒழிப்பிற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடமிருந்து நேர்மையான தன்னலமற்ற அனுகுமுறைகள் தேவை தொடர்ச்சியாக ஒரு தலைமுறைக்கேனும் தேவை, அதை இன்றைய ஓட்டு வங்கி அரசியலில் சாத்தியமாகப் படவில்லை.

இன்றைய சம்பவம் போன்ற நிகழ்வுகள், அதன் எதிரொலியாக உணர்ச்சிபூர்வமாக எழுப்பப்படும் கண்டணங்களால் ஏதும் பலன் இருக்குமா தெரியவில்லை.

பமக,விசிகே,கொமுக,புத இன்னபிற சாதீய கட்சிகள் அனைத்தும் முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும். மாறாக இது போன்ற சம்பவங்கள் அவரவர் சாதி மக்களை ஒன்றினைத்து, அவர்களது சாதி சார்ந்த அமைப்புகளுக்கு அதிக பலத்தை தந்துவிடுகிறது.

ஒரு பார்ப்பண வீட்டுக்குள் செல்ல அல்லது அவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக்கொள்ள ஏனைய சாதிகள் எப்படி மறுக்கப்படுகிறதோ அதே போல் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளை தள்ளிவத்திருப்பதும், ஏன் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே ஒரு தேவேந்திரகுல வெள்ளால சமூக அதே தாழ்த்தப்பட்ட பிரிவுக்குள் இருக்கும் ஒரு சக்கிலிய சமுதாயத்தை தன்னிலிருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறது. இதுதான் இன்றைய சமூகத்தில் நடைமுரை யதார்தத்தில் இருக்கும் நிதர்சனமான உண்மை.

ஆனால் பார்ப்பனீயத்தை எதிப்பதோடு நின்றுவிடுகிறது பகுத்தறிவு,. அல்லது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட சமூகத்திற்கிடையே இருக்கும் வேறுபாடுகளை குறைகூறுவதோடு நின்றுவிடுகிறது சமூகப்புரட்சி, தழ்ழ்த்தப்பட்ட பிரிவுகளுக்குள் உள்ள சாதீயம் பற்றி பெரிதாக எங்கும் பேசப்பட்டதாக தெரியவில்லை. சாதீய தீண்டாமை அல்லது ஒரு பிரிவு மற்ற பிரிவு மக்களை இழிவாக நடத்தப்படும் கொடுமை சங்கிலிதொடர்போல் ஐயர் அயங்காரிலிருந்து கடைநிலையாக கருதப்படும் தாழ்த்தபட்ட சீர்மரபினர் வரை சாதீயம் வேரூன்றி இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

கல்வி பொருளாதாரம் போன்றவற்றில் சமத்துவம் ஏற்பட்டால் பாதி அளவுக்கான பிரச்சினை தீரும் என்று தோன்றுகிறது. இன்றைய சீழ் பிடித்த சமுதாயச் சூழலை சரியாக்காமல், அவங்க சாதியைச் சார்ந்த பொண்ணுகளை இழுத்துவச்சி தாலியை கட்டுங்கடா என்றும், அவங்க சாதிபசங்க நம்ம சாதி பெண்ணை காதலிச்சா கழுத்தை வெட்டுங்கடா என்றும் கூறிக் கொண்டிருக்கும் சமுதாய தலைவர்களை கொண்டிருக்கும் வரை சாதி பார்க்காமல் மனதால் ஈர்க்கபட்டு செய்யப்படும் தூய காதல் கூட வெற்றிபெறப்போவதில்லை.



January 20, 2013

சென்னை புத்தகத் திருவிழா- பார்ட் 2


கடந்த ஞாயிறு குடும்பத்துடன் புத்தகக் கண்காட்சி சென்று குழந்தைகள் தொடர்பான புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அதில் பார்பி & பென்டென் மொம்மை (சுவரில் ஒட்டுவது) மிஸாகி, ஒரு வாரமாக குழந்தைகள் படுத்தி எடுத்துவிட்டார்கள்.

நேற்று பதிவர் சத்ரியன் ( Gopal Kannan) அவர்களின் கண்கொத்திப் பறவை கவிதைப் புத்தக அறிமுக விழா, நமது டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் (ஸ்டால் எண் 43 & 44 ) முன் ஏற்பாடகி இருந்தது. கூடவே நமது மின்னல் வரிகள் பாலகணேஷ் அண்ணனின் சரிதாயணம் @ சிரிதாயணம் நகைச்சுவை கதைகள், மற்றும் பதிவர் நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களின்  அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா? என்ற கவிதைப் புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டது.

சத்ரியனின் கண்கொத்திப் பறவை அறிமுக வெளியீடு
கேபிள், புலவர்,முரளிதரன்






கவியாழி கண்ணதாசனின் அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?  கவிதை புத்தகம் அறிமுக வெளியீடு. மெட்ராஸ்பவன் சிகக்குமார் & கவியாழி கண்ணதாசன். பின்னனியில் தமிழ்அமுதன்(ஒயிட் &பிளாக் டி-சர்ட்) பாலகணேஷ், நான்,முரளிதரன், கேபிள் சங்கர் & கவிஞர் மதுமதி.

பாலகணேஷ் அண்ணனின் சரிதாயணம் @ சிரிதாயணம் புத்தக அறிமுக வெளியீடு. கவியாழி கண்ணதாசன், நான், கேபிள் சங்கர், பாலகணேஷ், புலவர், அஞ்சா சிங்கம்.


நான் மதியம் சாப்பாடு முடிந்து, நேராக மெட்ராஸ்பவன் சிவக்குமார் வீடு சென்றுவிட்டேன் அங்கே, டெர்ரர் பதிவர் ஆரூர் மூணா செந்தில் ஏற்கனவே அங்கே உக்கார்ந்து டீ சாப்பிட்டு கொண்டிருந்தார். சிவாவின் அம்மா எனக்கும் டீ குடுத்தார்கள். சக பதிவர்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, போன வாரம் புத்தகண்காட்சியில், என் பையனை தொலைத்து மீட்ட கதை கேட்டார்கள். பயபுள்ளை எல்லாத்தையும் அம்மவிடம் ஒப்பித்துவிடுவாம் போல் இருக்கிறது. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம், சிவா ஒரு பெண் பின்னாடி சுற்றுவதாகவும் விரைவில் கால்கட்டு போட்டுடனும்னு சொன்னோம், என்னிடம் அப்படி யாரையாச்சும் கூட்டிட்டு வந்தாலும் சந்தோசம் என்று சொன்னாலும், பிறகு சிவாவுக்கு மண்டகப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் ஒத்துக்கொள்ள மாட்டான்.

புத்தகக் கண்காட்சியில் நேற்று நுழைவு டிக்கெட் எடுப்பதற்கே நீண்ட வரிசை இருந்தது. எங்களுடன் பதிவுலகின் மற்றுமொரு ரெட்டையர்களான பிலாஸபி பிரபாகரன் & அஞ்சா சிங்கம் செல்வின் இருவரும் சேர்ந்து கொண்டார்கள். ஸ்டால் எண் 1 லிருந்து ஆரம்பித்து 43& 44 டிஸ்கவரி வந்ததும் அங்கே தெரிந்த முகங்கள் இருக்கிறதா என்று பார்த்தோம், பதிவர் கே ஆர் பி செந்தில் தனது இரு பையன்களுடன் நின்றிருந்தார். பையன்கள் பக்கத்துக் கடையில் அஞ்சாரு புத்தகங்களை (கலரிங், ட்ராயிங் )ஆசையோடு கையில் வாங்கி வைத்திருந்தார்கள். (பசங்க படம் போடமாலா என்று நினைத்து, அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு போடலாமென்று இந்த பதிவில் போடவில்லை)

சிறிது நேரத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டது.... புலவர் அய்யா, கவியாழி கண்ணதாசன், பாலகணேஷ், சத்ரியன், அஞ்சாசிங்கம், ஆரூர் மூனா செந்தில், மதுமதி, பிலாஸபி பிரபாகரன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், கேபிள் சங்கர், தமிழமுதன், டிஎன் முரளிதரன், பெண்பதிவர்கள் சசிகலா, தமிழரசி, பத்மா நாரயணன், வெண்ணிலா, சாகிதா, செல்வி சமீரா,  மற்றும் எனக்கு அறிமுகமில்லாத நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.

புக் வெளியிட்டு பேசுவதற்கு நமது சக பதிவர் நண்பர் புதுகை அப்துல்லா அண்ணேன் வருவதாக இருந்தது, அவர் வீட்டி முதல் நாள் இரவில் துக்கம் நிகழ்ந்துவிட்டதால், ஊர் சென்று விட்டார், அவரால் கலந்து கொள்ள முடியாத நிலை.

எனவே இன்ஸ்டண்ட் உப்புமா போல், பதிவுலகின் உச்சம் பதிவர் கேபிள் சங்கர் அவர்களை அழைத்து புக் அறிமுகம் செய்து வெளியீடு செய்யப்பட்டது. கேபிள் வெளியிட புலவர் மற்றும் பெண்பதிவர்கள் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்கள். சத்ரியன் புத்தகம் பற்றி சிறிது பேசிவிட்டு நன்றியுரை ஆற்றினார்.

பின் அணைவரும் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடைக்கு பயணமானோம். கூடியிருந்தது 25 பதிவர்கள் எண்ணிக்கையில் இருக்கும், ஆனால் ஜூஸ் எண்ணிக்கை 50ஐயும் தாண்டிக் கொண்டிருந்தது,  

நான் ஒரு ஜூஸ்தான் குடித்தேன். 

 எப்படித்தான் இப்படி எல்லா வெரைட்டி ஜூஸ்களையும் ஒரே நேரத்தில் குடிக்கிறார்களோ!!! தெரியவில்லை :-))), அதுவும் சக பதிவர் வாங்கிக் குடுத்தால் மொட்டைதான் :-)))

இதில் பத்மா அக்கா மூன்று ஜூஸ் குடித்தார்கள், ஆப்பிள், ஆரஞ்சு & லிச்சி ஜூஸ், டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று செக் செய்தார்களாம் :-))
பத்மா அக்கா ரெண்டு ஜூஸ்களுடன், முடித்துவிட்டு முன்றவது ஜூஸ் குடித்தார்  :-))


பிலாஸபி பிரபாகரன் நான்கு ஜூஸ் என்று நினைவு, மெட்ராஸ் ரெண்டு, ஆரூர் மூனறா நான்கா என்று நினைவில்லை. செல்வின் ஓரத்தில் ரெண்டு ஜூஸ் கிளாசுடன் நின்றிருந்ததைப் பார்த்தேன் அது எத்தனையாவது ரவுண்ட் என்று தெரியவில்லை.

பெண்பதிவர்கள், ஜூஸ் பத்தவில்லை, நாங்கள் பக்கத்து ரெஸ்டாரண்ட் செல்கிறோம் வருகிறீர்களா என்று கூப்பிட்டார்கள், கைப்புள்ள சிக்கிறாத என்று உள்மனது விசில் அடித்ததால்,  நீங்க போயிட்டிருங்கக்கா பசங்க கூப்பிடுறாங்க என்று அவ்ர்களை அனுப்பிவிட்டு மறுபடியும் பசங்களோடு புக் ஸ்டால்கள் பயணம்.

நேற்றுதான் நாங்க ஐவரும் சேர்ந்து ஒரு ஸ்டால் விடாமல் விஜயம் செய்தோம். ஆரூர் மூனா செந்தில் சுமக்க முடியாத அளவுக்கு ( அவர் சைசுக்கு சும க்க முடியாத அளவுனா அது எம்புட்டுனு நீங்களே கணக்கு போட்டுக்குங்க மக்களே) புத்தகங்கள் வாங்கி விட்டார், என் கைகளில்ம் மூன்று பைகள் ஆகிவிட்டது.



சுயமரியாதை ஸ்டாலில் நாற்காலி போட்டிருந்ததால் நான் அதிலொன்றில் அமர்ந்தேன், பக்கத்து சேரில் திக கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர், புத்தக கண்காட்சி பயனுள்ளதாக இருந்ததா உங்களின் கருத்து என்ன என்ற கேள்வியுடன் உரையாடலை ஆரம்பித்தார்.... அது முடிவில் பெரியார் கொள்கைகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக இன்றைய காலகட்டத்தில் எப்படி இருக்கிறது,  பெரும்பாலும் இன்று அவருடைய கொள்கைகளை அரசியல் மற்றும் சொந்த நலன் வேண்டி தற்போதைய அதன் தலைவர்கள் நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள்,  பெரியாரின் அடிபப்டையான சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கு மக்களிடம் அமோக ஆதரவிருந்தாலும் அந்தக் கொள்கைகளை தற்போதைய யதார்தத்தில் எந்தளவுக்கு சரியாக பரப்புரை செய்கிறார்கள் என்கிற ரீதியில் இருந்தது.


ஆனால் கட்சியின் மாநில பொறுப்பில் உள்ள ஒருவர் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் தோளில் கைபோட்டுக்கொண்டு சரிசமமாக அவரின் கருத்துக்களை அழகாக பேசினார். அவர் பேசியது வெகு யதார்த்தமாக , இருக்கும் பிரிச்சினைகளின் அடிப்படையில் அதற்கான தீர்வாக ஒன்றைவைத்து போராடும் பெரியாரின் பேச்சுக்களின் சாரம் இருந்தது. அவருக்கு நன்றிகள் பல. அவரிடம் விடைபெற்று வெளியில் உள்ள மெடை அரங்குக்கு வந்தோம்.


சிறிது இளைப்பாறல் வைகோ பேசுவதாக இருந்தது , அங்கே அதற்காக அங்கே இளைஞர்கள் அதிகமான விகிதாச்சாரத்தில் அவரை எதிர் பார்த்துக் காத்திருப்பதாகவே பட்டது.
பிலாசபி பிரபாகரன், நான், அஞ்சாசிங்கம் செல்வின் & ஆரூர் மூனா செந்தில். ப்டம் பிடித்தது மெட்ராஸ்பவன் சிவக்குமார்.மேடைக்கு முன், நடந்து  கால் வலித்ததால் கொஞ்சம் ஓய்வு :-)))


வைகோவின் வரவை எதிர் பார்த்து! அரங்கில் கூட்டம்.

கைல இருக்கிற மொபைல் போனை வச்சிகிட்டு வளைச்சி வலைச்சி போட்டோ எடுத்துகிட்டேன் இருந்தான் சிவக்குமார், காமிக்கச் சொன்னா காமிக்கலை. அங்கே இருந்த ஒரு பெண் முறைக்கவும் ஓடிவந்து என் பக்கத்தில் அமர்ந்தார் என்பதை, நான் பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை.

இடையில் YMCA கேண்டீன் விஜயம், காபி பிஸ்கட்ஸ், ஆரூர் கலராக இருக்கிறதே என்று நீலக்கலர் எனர்ஜிட் டிரிங் வாங்கி, அதை ஒரு வாய் குடித்து விட்டு முகத்தை அஷ்டகொணலாக்கிக் காட்டியது சுவாரஸ்யம். மனுசன் இனிமேல் கிரிக்கெட் பார்க்கும் போது பயபுள்ளைக கலர்கலரா கலர் குடிப்பதைப் பார்த்து இனிமேல் சிரிப்பார் :-))

திரும்பும் முன் பார்பி & பென் டென் பொம்மை மறக்காமல் ( ஞாபகப் படுத்திய பிலாசபிக்கி நன்றி) வாங்கியாகிவிட்டது. வீட்டில் வந்து சுவற்றில் ஒட்ட குழந்தைகளுக்கு மகிழச்சியில் துள்ளிக் குதித்தார்கள்.
வீட்டில் வந்து சுவற்றில் ஒட்டப்பட்ட பார்பி & பென்டென் பொம்மைஸ்.



இப்படியாக நேற்றைய புத்தகக் கண்காட்சி விசிட் இனிதே முடிந்தது.



January 13, 2013

சென்னை புத்தகத் திருவிழாவில்....



36-வது சென்னை புத்தகத் திருவிழா 2013






வீட்டிலிருந்து மாலை 3 மணி சுமாருக்கு கிளம்பி 4 மணிக்குள் ஸ்டால் இருக்கும் இடம் சேர்ந்துவிட்டோம். இடையில் வண்டி நிறுத்த 10 நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது, பார்க்கிங் ஃபுல். 

ஸ்டால் இருக்குமிடம் போகும் வழியிலேயே சிறுவர்களை ஈர்க்கும் விதமாக கார்டூன் கதாபாத்திர டிசைன்கள் ஓரமாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள், வீட்டில் எதுவும் கேக்கமாட்டோம் என்றவர்கள், அங்கேயே பிள்ளையார் சுழி போட்டு வாங்க வைத்தார்கள்....

ஸ்டால்கள் இருக்கும் இடத்திற்கு சற்று முன்னர் இருந்த ஆடிட்டோரியத்தில் மணிமேகலை பிரசுரத்தாரின் புத்தக வெளியீடு தொடர்பான நிழச்சி நடந்து கொண்டிருந்தது. வலைப்பதிவு நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களின் கவிதை புத்தகமும் இன்று வெளியாகிறது, அதற்கு அழைப்பும் விடுத்திருந்தார். வரும்போது அவரின் புத்தகத்தை நம் இணைய நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் காம்ளிமெண்டரி காபியாக ஒரு புத்தகம் அளித்தார்.


ஸ்டாலின் ஆரம்பம் கடைசி ஸ்டால் எண்ணிலிருந்து ஆரம்பித்திருந்தது... ஒவ்வொருகடையாக ஏறி இறங்க, குழந்தைகள் புத்தகம் வாங்கித்தருமாறு கேக்க ஆரம்பித்துவிட்டார்கள், குழந்தகளுக்கான கடை வரும் அப்போது வாங்கித்தருகிறோம் என்று சொன்னாலும் சமாதானமாகவில்லை.... பயந்ததுபோல் பையன் ஒரு புத்தகைத்தை கையில் எடுத்துக்கொண்டு அது வேண்டும் என்று சொல்லிவிட்டான். சரி என்ன புத்தகமென்று பார்க்கலாம், குடுடா என்று பார்த்தால்... அவ்வ்வ்வ்... அது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பாகம் 3.  நான் சொல்லிக் கேட்கவில்லை... வீட்டம்மனி சொல்லியும் முடியாதுனு சொன்னதில் எனக்கு மனதிருப்தி. முடிவில், கடைக்காரரை இது காலேஜ் படிக்கிறவங்க படிக்கிறது, ப்ரீகேஜிக்கி வேற கடையில் புத்தகம் இருக்கு என்று சொல்லச் சொல்லி, அவர் சொன்னதும் சமர்த்தாக குடுத்துவிட்டான்.
இனி சமாளிக்க முடியாதென்று அங்கிருந்து நேராக நம் நண்பரின், டிஸ்கவரி புக் ஸ்டால் (43& 44) சென்றோம். அங்கு குழந்தைகளுக்கான புக்ஸ் இல்லையென்று அறிந்து அதனை ஒட்டியிருந்த கடையில் புக்ஸ் வாங்கினோம்... பாப்பாவுக்கு 5 எண்ணிக்கையில், பையனுக்கு ஏற்ற புக் ஒன்றுதான் கிடைத்தது, சரி உனக்கு அடுத்த கடையில் வாங்கித்தருகிறோம் என்று சொல்லியும், அக்காக்கு மட்டும் நிறைய புக்ஸ், எனக்கு ஒன்னு மட்டும்தான்...நிறைய வேணும்னு சொல்லி ஸ்டாலை விட்டு வரமுடியாதென்று தர்ணா......


கடைசியில், கடை முதலாளி வந்து *பென்டென்* ப்ளாஷ் கார்டு செட் ஒன்றை அவனுக்கு அன்பளிப்பாக குடுத்ததும்தான்( நான் வேண்டாம் என்று சொல்லியும் அந்த அம்மனி ஆசையாக குடுக்கிறேன் என்று சொல்லி குடுத்துவிட்டார்கள்) கடையை விட்டு வெளியே வந்தான். அதை வாங்கி விலை பார்த்தால் ரூ125 என்றிருந்தது, வாங்கிய ஐநூத்தி சொச்ச மதிப்பிலான புத்தகங்களுக்கு 125ஐ லவட்டிவிட்டான், புத்திசாலிதான் :-)))


மேலும் சிலகடைகள், சென்று ஹிந்தி சொல்லித்தருவதற்கான புக் ஒன்று வீட்டம்மனி வாங்கியவுடன், வெளியே வந்து குழந்தைகளுக்கும் &அம்மனிக்கிம் ஐஸ்கிரீம், நான் ஸ்வீட் கார்ன் என்று முடித்துக்கொண்டு, இரண்டு வாட்டர் பாட்டில்கள் வாங்கி அதை கார்கோ பேண்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டு மீண்டும் அரங்கினுள். எல்லாக் குழந்தகளும் பலூன் வைத்திருந்தைப் பார்த்து பைசங்களும் கேட்க, விசாரித்தால் அது Z தமிழ் ஸ்டாலில் குடுப்பதாகச் சொன்னார்கள். அங்கு சென்று நாலைந்து வாங்கி பசங்களிடம் குடுத்தோம்.


அடுத்து கிட்ஸ் புன்னகை ஸ்டால் (Kids Punnagai -  GK TREASURE FOR JUNIOR STUDENTS) , ஜனவரி மாத இதழ் வாங்கிய கையோடு வருட சந்தாவுக்கும் அப்ளைசெய்துவிட்டு ( LKG to 5th STD படிக்கும் குழந்தகளுக்கு மிகவும் பயனுள்ள இதழ்), அடுத்ததாக  விவேகானந்தர் ஸ்டால், அங்கே ஒரு 3D சாமி படம், ஒரு கோல்டு கோட்டட் பிரிண்டிங் சாமி படம், சுற்றில் தொங்கவிட புதிதாக ஒரு விவேகானதர் படம்.


பக்கத்து ஸ்டாலில்(ஊட்டி ஸ்டால்) சமையல் தொடர்பான பொருகள் வைத்திருந்தார்கள். அதில் பட்டை, சோம்பு,மிளகு, சீரகம்னு  எல்லாத்திலேயும் ஒரு பாக்கெட் பார்சேல்ல்ல்ல் :-)))


சரி அடுத்து எந்தக்கடை என்று யோசித்துகொண்டே நகர்ந்த போது போன் மணி அடித்தது, கையில் பிடித்திருந்த பையனின் விரலை நழுவவிட்டு போன எடுத்தால் அஞ்சா சிங்கம் செல்வின். நாங்களும்  அரங்கில் தான் இருக்கிறோம் என்று. நான் நிற்கும் இடம் சொல்லிவிட்டு, போனை அணைத்து (30 செகண்ட் பேசியிருப்பேன்), சரி வாடா போலாம் என்று திரும்பி பார்த்தால், பையனைக்காணோம்...........


*10 நிமிடத்தில் அறிவிப்பு செய்யிம் இடத்தில் செய்த அறிவிப்பில் அங்கே சென்று அழைத்து வந்தோம். அந்த பத்து நிமிட பரபரப்பு.....  பிலாஸபி பிரபாகர், மெட்ராஸ் பவன் சிவக்குமார் என்று நண்பர்களும் ஓடியாடியது.... தனியாக எழுதுகிறேன்...*


பையனுக்கு என் மேல் சரியான கோபம். 10 நிமிடம் செலவளித்து பின் சமாதானம். சகஜமாக சிரிக்க ஆரம்பித்தான்.


மறுபடியும் டிஸ்கவரி ஸ்டால்... அங்கு பிளாக் & பிளஸ் நண்பர்கள் ஓவ்வொருவராக வர களைகட்டியது... வீட்டம்மனிக்கி எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தேன்,  ஒதுங்கி நிற்காமல் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தாள்.( நண்பர்களை பார்க்கத்தான் இங்கே கூப்பிட்டு வந்தீர்களா, எங்களுக்காக என்று பொய் சொன்னீர்களா என்று கேள்வி,அப்படி இல்லையென்றேன்), கிளம்புவதற்கு சற்று முன் மணிஜி அண்ணேன் மகளுடன் வந்திருந்தார் அவருடன் சிறிது அலவலாவல்.

கிளம்பும் முன் அனைவரையும் பார்த்து ஒரு நாள் வீட்டிற்கு அனைவரும் வாருங்கள், என்று அம்மனி அழைப்பு விடுத்தார்கள், அதற்குள் ஒரு அந்நியோன்யம் ஆகிவிட்டிருந்தார்கள், என்னிடமும், ஒரு நாள் அனைவரையும் அழைத்துவாருங்கள் என்றார்கள். பாப்பா அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துகள் சொன்னாள்.


அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, வரும் வழியில் வடபழனியில், நாளை பொங்கள் வைக்க மண்பானை ஒன்றும், மண் அடுப்பு ஒன்றும் வாங்கிக் கொண்டு வீடு வந்தாயிற்று.


குழந்தைகள் அவர்களுக்காக வாங்கி வந்த புத்தகங்களை விரித்து வைத்துக்கொண்டு.... இன்று இரவு 1 மணிக்கு மேல்தான் தூங்கச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்......


புத்தகக் திருவிழா விசிட் பசங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகிவிட்டது....................


டிஸ்கி : வீட்டம்மனி முன் பதிவர் நண்பர்கள் என்னை தொடர்ந்து கலாய்த்ததை, அம்மனியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை கலாய்த்ததை எழுதாமல் மறைத்து விட்டேன்)


என்றும் அன்புடன்

LinkWithin

Related Posts with Thumbnails